இதுவும் என் வாழ்க்கையின்
உண்மைச்சம்பவமே.
'மரத்தை வெட்டி எறி
வீட்டை பெரிதாக்கு' என்று குத்தலுமொன்றுமே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் சமுதாயத்தை
இப்படியும் வந்து பாருங்களேன் என்கிறார்கள் இந்த உயர்ந்த மனிதர்கள்! மேலே படியுங்கள்
வருடா வருடம் அது
ஒரு குதூகலமாக சேர்ந்து கொண்டாடும் இரவு எங்களுக்கு
!! நண்பர்களோடும் சக தோழர்களோடும் இரவில் சேர்ந்திருந்து கொட்டமடிப்பதே தனி சுகம்தான். ஃபேக்டரி ரொம்ப பெரியது இல்லை.ஆகவே அந்த இரவு நேர
பிக்னிக்கில் குடும்பமும் சேர்ந்துகொண்டு குழுவின் அந்நியோநியத்தை அபரிமிதமாக ஆக்கிவிடும்!!
வருடம் முழுவதும் அந்த தோழமை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு கொண்டு சேர்த்துவிடும்!
ஒரு வருடம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில்வர்
சேன்ட்ஸ்.
அடுத்த வருடம் தமிழ்நாடு
கேம்ப் சைட். முன்னையவிட பெரிய இடம். கொண்டாட்டமும் அதிகம்தான்.
ஆகவே சில வருடங்களுக்குப்பின்
திரும்பவும் அங்கு செல்லலாம் என ஏகமனதாக முடிவுசெய்து விட்டோம். ஆனால் எங்களுக்கு கிடைத்தது
பெரும் ஏமாற்றமே அந்த கேம்ப் சைட் ஹோட்டலாக ஆகப்போகிறதாம்.....ம்ம்ம்ம்.... தமிழக அரசே
கட்டப்போகிறதாஎன்ன?
இல்லையாம் வெளி ஆட்கள்தானாம்…….
எனக்கோ வருத்தமான
வருத்தம். அழகான கேம்ப் சைட் இல்லாமல் போகிறதே என்ற வருத்தம் ஒருபுறம் இருக்க அங்கு
கூட்டம் கூட்டமாக தென்றல் பிடித்து நிற்கும் 900 சில்லறை மரங்களும் சேன்கொபெய்ன் கண்ணாடிக்
கட்டிடங்களுக்கு இரையாகி ஆகிவிடுமே, அரசு எடுத்தாலாவது மரங்களைக்கொஞ்சம் விட்டு வைக்குமென்று
நினைக்கலாம்…… ப்ரைவேட் பார்ட்டிகள்……… அவர்கள் லாபத்தை முன் வைத்துதான் ஹோட்டலைக்
கட்டுவார்கள், பெரியதாகக் கட்டினால் நிறைய அறைகள் ...நிறைய அறைகள், நிறைய மக்கள்
... நிறைய மக்கள் நிறைய லாபம் இப்படித்தான் அவர்கள் கணக்கு போகும்.
சேதியைக்கேட்டஅந்த நாள் என் மனது முழுவதும் இன்னதென்று
பிடிபடாத ஒரு வருத்தம்.
சில வருடங்கள் சென்றன.
வெளிநாட்டு நண்பர் ஒருவரை அந்த ஹோட்டலில் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த ஹோட்டலை எப்படி கண்கொண்டு பார்க்கப் போகிறோம்
என நான் எண்ணினாலும் மனம் வேதாந்தமாய் ஒரு கணக்கையும் கைவசம் வைத்திருந்தது. ‘அதுதானம்மா
வாழ்க்கை’ என அது சொல்லியது.
கடற்கரைக் கோயிலைத்தாண்டி
ஊர் பெரிய குளமும் தாண்டி உள்ளே சென்று இறங்கிய அந்த நேரம் எனக்கு ஒரு அற்புத நேரமே!!
அதே தென்றலை பிடித்துக்கொண்டு கேம்ப்சைட்டில் நாங்கள் அன்று ரசித்த அதே மரங்கள் வாருங்கள் வாருங்கள் என அதே கட்டியம் கூறின. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை! திகைத்துப்போய்
விட்டேன்.
24 மணி நேர ரெஸ்டாரெண்டில்
சந்திப்பதாக முடிவு செய்திருந்தோம். உள்ளே இன்னும் ஒரு பெரும்…….. மாபெரும் அற்புதந்தான்
காத்து நின்றது எனக்கு!!
ரெஸ்டாரெண்டின் நட்ட
நடுவே பெரியதொரு புங்க மரம். அதை மையப்புள்ளியாக வைத்தே அந்த இடம் கட்டப்பட்டிருஇந்தது!! வாயிற்படியில் ஒரு நோட்டீஸ் வேறு...... மரங்களை
முன்னிருத்த இதுமட்டும் பற்றாது பற்றாது என்று நினைத்த அந்த ஹோட்டல் சொந்தக்காரர் புங்க
மரத்தை வள்ளல்பெருமான் கர்ணனுக்கு ஒப்பிட்டு எப்படி புங்க மரத்தின் ஒவ்வொரு பாகமும்
மருந்தாகும் என புள்ளி விவரமுடன் எழுதியுள்ளார். பழம் நழுவி பாலில் விழுந்தாற் போலிருந்ததுஎனக்கு
!! அந்த மனிதன் மரங்களை நேசிக்கவில்லை விழுந்தல்லவோ கும்பிடுகிறான்!!
சுற்றுப்புற சூழலை
தந்து ஒவ்வொரு காரியத்திலும் செயல் படுத்தும் அவர் ஸ்டீவ் போர்ஜியா........வேட்டி கட்டி
குங்குமம் வைத்து தமிழ் பேசும் பச்சைத்தமிழன்! இந்த ஹோட்டலைக் கட்டுகையில் ‘மனிதனும் மரங்களும்’ என்ற
நாட்குறிப்பு போன்ற ஒரு சிறு புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் எனக்குப் பிடித்த பகுதி
தாய்ப்பறவையும் அதன் குஞ்சும் பேசிக்கொள்ளும் உரையாடல் பகுதிகளே. இடம் கைமாறிவிட்டது
என்று தெரிந்தவுடன் தன் வீடு கலைக்கப்படப் போகிறது அதுகள் படும் கவலையும் வருத்தங்களும்
………….. தினம் தினம் ஆட்கள் நடமாட்டம் அதிகரிக்க
விகிதாச்சாரமாய் அதுகள் கவலைகளும் அதிகரிப்பது………… ஹோட்டல் திறப்பு விழா அன்று அங்கிருந்த
பெரிய புங்கமரம் மையப்புள்ளியாய் ஆனதில் கலர்
ரிப்பன்களும் பலூன்களும் கட்டப்பட்டு அது உயர்த்தப்பட்டதில் அதுகள் அடைந்த புளங்காகிதம்
என்னையும் தொத்திக்கொண்டது!!
இருந்த மரங்களோடு இன்னும் மரங்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறார் இந்த
ஸ்டீவ் போர்ஜியா!
நன்றி எம் இனிய நண்பனே!
மரங்களது நல் எண்ண அலைகள் என்றும் உன்னோடுதான்!!
மரவிரும்பிகள் எங்களது
உள்ளங்களும் உன் பக்கமே!!

No comments :
Post a Comment