வெளியூர் சென்று வீடு திரும்புகிறேன். கேட்டைத்திறந்த
உடன் கம்மென்று வாசனை. நிமிர்ந்து நித்திய மல்லிக் கொடியை நோக்குகிறேன்.”சரியான கேனம்தான்
நீ….. மே மாத பொட்டை வெயிலில் … மதியம் இரண்டரை மணிச் சூட்டில்….. நான் பூத்து உனக்கு
வாசனை கொடுக்க வேண்டும்……அப்படித்தானே….” குறுக்கிச் சுருக்கி மஞ்சளான மல்லி கெக்கலித்தது.
காம்பவுண்டை ஒட்டி நின்ற நைட் குயினைப் பார்க்கிறேன்.
ஏழு மணிக்கு மேல்தானே அவள் விளையாட்டைஆரம்பிப்பாள்…..கொட்டமடிப்பாள்…. வேறே செடி எதுவும்
நட்டோமோ… நாலு தென்னை மரத்து நிழலில் எந்த செடியும் பூத்துக்குலுங்காது என்ற விரக்தியில்
நான் செடி வைப்பதை விட்டே ரொம்ப நாளாகிறது. குளித்துவிட்டு யாரும் போட்டிருக்கும் பவுடரோ….?
மாடிக்குச் செல்கிறேன். அங்கேயும் அந்த வாசனை……ஆஹா….. இவரை எப்படி மறந்தோம்…
குறுந்தளிரோடு வெள்ளை அச்சிப்பூவாய் என்னைப்பார்த்து சிரித்தது என் வில்வ மரம்.
நினையாத நேரத்தில் நமக்குக் கிடைக்கும் புன்னகை……
யோசனை செய்கிறேன்…

No comments :
Post a Comment