இன்றைக்கு நான் எழுதும்
“அந்த இரண்டு ரூபாய்”
கதை
நம் வாழ்க்கையின் அடிப்படை வசதியை அடிப்படையாகக்
கொண்ட ஒன்று.
2013 ஜூலை மாதம்
சென்னையின் பன்னாட்டு விமான மையம்
பரீக்ஷார்த்தமாக திறந்துவிடப்பட்டது. விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமான நிலைய
கழிவறையிலிருந்து வரும் நாற்றத்தைத்தாங்கமுடியாமல் வெளியே ஓடிவந்தனர் உள்
சென்ற பயணிகளோ அதே காரணத்தை முன்னிட்டு
விமானத்தை நோக்கி ஓட்டம்
பிடித்தனர். இது நான்
படித்த செய்தி
அதே ஆண்டு அதே
ஜூலை நாங்கள் பங்களூரில் இருந்து மும்பை கிளம்பிய
அன்று அந்த அதி
நவீன பங்களூர் விமான நிலயத்தில்
இதே ரீதியில் எனக்கு ஒரு
அதிர்ச்சி தரும் அட்வெண்ட்சர்
காத்து நிற்கிறது என்பதை நான் அப்போது
அறிந்திருக்கவில்லை!
”காலையில்
எழுந்தவுடன் படிப்பு” என்ற
பழஞ்சொல்
என் அகராதியில் ”காலை
எழுந்தவுடன் ஒரு லிட்டர்
தண்ணீர்” என்று இருந்தபடியால்
அந்த சொல்லுக்குக் குறையொன்றும் வைக்காமல் அதிகாலை எழுந்தவுடன் அக்கடனைமுடித்து அதுதரும் பல உப
பயன்களில் புளங்காகிதமடைந்து பாத்ரூமைவிட்டு வெளியே வந்த
பின்னரே மும்பைக்குக் தயாராக ஆரம்பித்தேன்.
ஒன்பது மணி
விமானத்திற்கு நாங்கள்
நேரத்தோடேயே கிளம்புவதற்கு இரண்டு காரணங்கள்
இருந்தன. இந்த பெங்களூர்
விமான நிலயம், சென்னயைப்போலவோ
அல்லது சிங்கப்பூரைப்போலவோ கிளம்பினோமா, போனோமா
என்று கிடையாது கோலாலம்பூரைப்போல ஊரைவிட்டு பரதேசத்தில் கட்டியிருக்கிறார்கள்…… போய்ச்சேர குறைந்தது இரண்டு மணி
நேரமாவது ஆகிவிடும். இன்னொரு
காரணம் விமான நிலையத்தில்
பங்களூரின் பிரசித்தி பெற்ற மசால்
தோசை சாப்பிடலாம் என சுவையான
திட்டம் ஒன்றும்கை வசம் இருந்தது
.
கிட்டத்தட்ட இரண்டு நேர
பயணத்திற்குப்பின் விமான நிலையம்
கண்ணில் பட்டது.
என் ஒரு லிட்டர்
தண்ணீரும் கரக்டாக ஆஜர் ஆகி
என் கவனத்தை அமோகமாக ஈர்க்க ஆரம்பித்தது.
நுழைந்தவுடன் கண்ணில் பட்டது தோசைக்கடைதான்.”
ஏம்ப்பா சீட் கெடக்கிறது
கஷ்டமாயிருக்கும். நீங்க ரெண்டு
பேருக்கும் ஆர்டர் பண்ணிட்டு
உக்காந்துகிங்க நான் இப்ப
வந்துற்ரேன்.” இவருக்கு கட்டளை பிறப்பித்துவிட்டு “பொம்பள
படம்” பார்க்கும் நோக்கோடு நான் அவசர நடை
போட்டேன். போகவேண்டியஇடம் வலது கைப்பக்கம்
இருப்பதாகக அம்புக்குறி கூறிற்று. ஆனால்
அங்கேயோ ஆம்பளைகளும் பொம்பளைகளுமாக சேர்ந்து அங்கு 10 பேர்
மும்மரமாகஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்…….. இன்னும் கொஞ்சதூரம் நடந்து பார்த்தேன்.
கிட்டத்தட்ட விமான நிலையத்தைவிட்டு
வெளியே வரும் பாதைக்கு
வந்துவிட்டிருந்தேன். பெங்களூர்
எனக்குப் புதுசு, மனசுக்குள்
ஒரு
பயம் கவ்விக்கொண்டது.உள்ளே
ஓடிவந்து செக்யூரிடியிடம் வினவுகிறேன்.அழகான
ஹிந்தியில் “தாயினே ஹை”
என்றார் அவர். அவருடைய
தாயினேயைத்தான் ஏற்கனவே நான் பாத்து
தொலஞ்சிட்டேனே!
எரிச்சலும் அவதியுமாக வலது பக்கம்
பார்த்துக்கொண்டே இன்னொரு
வலதில் திரும்பினேன் கொஞ்சம் தூரத்தில் பொதாராக செடிகள் வளர்ந்திருக்க ஆண்கள் நடமாட்டம்
என் கண்ணில் தென்படுகிறது ஆம் அதுவேதான்.
ஆண்கள் கூட்டம் அங்கிருந்தால் பெண்கள் இடம் அருகாமையில்
இருக்கப்போவது நிச்சயம்.
சந்தோஷம் பிடிபடவில்லைஇந்த அற்பத்திற்கு!!
'யூரேகா’
என கத்தாத குறையோடு
எந்தக் கதவு திறந்திருக்கிறது
என்ற ஆவலுடன் நுழைகிறேன். “தோ ருப்யா
தீஜியே” என்ற குரல்
என்னைத் தடுத்தாட்கொள்கிறது!
மேசை நாற்காலி போட்டு வசூல்காரப்
பெண்ணொருத்தி அங்கு அமர்ந்திருந்தாள்!
"நம்பமுடியவில்லை
நம்பமுடியவில்லை” என்று சிவாஜி
ஒரு படத்தில் உணர்ச்சிபூர்வமாகக் கத்திப்பாடுவாரே அதே நிலையில்
தகித்தது என்மனம்! அது
உடனே ஆங்கிலத்துக்கு வேறே தாவி
“ இம்ப்பாசிபிள், இம்ப்பாசிபிள்….டாய்லெட்டுக்குப்போக
இரண்டு ரூபாயா…” என்று
அலறியது. “நவீன விமான
நிலையமா இது?!” என
ஆச்சரியக்குறி வேறே துணைக்கு
வந்தது
"சரிதான்
போங்க……. மொதல்ல அந்த
ரெண்டு ரூபாயத் தூக்கிப்போட்டுட்டு
வேலயப்பாப்பிங்களா அத வுட்டுபுட்டு………..
என்னென்னமோ கத உடுறிங்க”
நீங்கள் சொல்லுவது என் காதிலும்
விழுகிறது
ஆனால் என் நிலமை இன்னும்
உங்களுக்குப்புரியவேயில்லை
…..அந்த
ரெண்டு ரூபாய் காசு
………… என் கைவசம் இல்லையே…!
“இது
இவளுடைய கெட்ட பழக்கமா
நல்ல பழக்கமாண்ணு தெரியில, ரெண்டு
பேரும் சேர்ந்து வெளிய கிளம்பினால்
இவள் பெரிய ராயல்டி
மாதிரி ஹேண்ட் பேகைத்
தொடமாட்டாள். பேங்கர் பக்கத்திலேயே வரும் சவடால்!
எந்த விருந்துக்குப்போனாலும் “அப்பா……. ஹேங்க்கிய
கொஞ்சம் குடுங்க”ண்ணு
உரிமையாய்ப் வாங்கித் துடைத்து வாழும் உயரிய
இனத்தவள் இவள்!“
"இப்ப
புரிந்து கொண்டீர்களா இவள் நிலமையை?
மசால் தோசைக்கு இவர் உட்கார்ந்திருந்த
இடமோ அந்தக்கடைசி…… அவரிடம்
போய் ரூபாய் வாங்கிக்கொண்டு
திரும்ப வருவது சாத்தியமான
ஒன்றாகத் தோன்றவில்லை. எனக்கு
முன்னால் ஒரு ஜோடி…….போய்க்கொண்டிருந்தது. ஓடிப்போய் அவர்களை மடக்கி வெட்கத்தை விட்டு ஆங்கிலத்தில்
“கேன் யூ ப்ளீஸ்
கிவ் மீ டூ
ருப்பீஸ்? உள்ளே போனவுடன்
கொடுத்துவிடுகிறேன்.” என்றேன். அவர்களுக்குப்
புரியவில்லை க்யா.. க்யா
என்றார்கள். உடனே அவர்கள்
மொழிக்குப்பாய்ந்தேன். “ரெண்டு ரூபாதான்………
ஜாஸ்தி இல்லை நாங்கூட
குடுத்தேன். சும்மா அந்த
மேசையில் வைத்துவிடுங்கள்” என அந்த
பெண்மணி எனக்கு பவ்வியமாக
விவரித்தார்கள். என்னை அவர்கள்
சரியாகப்
புரிந்து கொள்ளவில்லை. ரெண்டு
ரூபாய் அங்க குடுக்குணுமா
வேணாமா எனக்கேட்கிறேன் என்று எண்ணிவிட்டார்கள்,
திரும்பவும் அதே வெட்கத்தை
விட்டு அதே இரண்டு
ரூபாய்க்கு மறு மனு
போடுகிறேன். இப்போ அவர்களுக்கு
சகலமும் தெளிவாகிப்போனது!! அச்சா அச்சா
என்ற
அவர்
நாலு ரூபாயை என்
கையில் திணித்து உங்களோடு யாராவது வந்திருந்தால் இது உபயோகப்படும்
என்று சொல்லி சிரிப்பு
ஒன்றையும் கூட உதிர்த்துவிட்டு
போகிற போக்கில் திரும்பக் கொடுக்கவேண்டாம் என அவர்
சொன்னது அரைகுறையாகவே என் காதில்
விழுந்ததில் எனக்கு ஆச்சரியம் ஒன்றும்
இல்லை
நீங்களும் நிச்சயமாக ஆச்சரியப்பட்டிருக்க மாட்டீர்கள் என நானும்
நிச்சயமாக அறிவேன்!!
நன்றி என் அருமை
ஜோடியே! இந்தியாவின் எந்தப்பகுதியில் இருந்தாலும் இந்த ஸ்பெஷல்
இரண்டு ரூபாய்க்காக நீங்கள் நீடூழி வாழ
வேண்டும்!!
சூப்பர்! அடுத்த கதைக்கு காத்திருக்கோம்!
ReplyDeleteThank u...Hope I don't disappoint you
ReplyDelete