மலைப்பிரதேசத்து
அந்த கார் டிரைவருக்கு கஷ்டமான வாழ்வுதான். பெரிய குடும்பம்... ஒற்றை சம்பாதனை
.....
"கோடை
காலத்தில சொகமான மலக்காத்த வாங்க வரும் டுரிஸ்டுகளின்
தயவில் நாலு காசு கையில புரளும். உள்ளூர் ஆளுகளே
குளிரில விறைச்சிப்போய் கிடைக்குற இந்த பனிக்காலத்துல
நானும் வேலைக்குப்போறேன் பேர்வழிண்ணு வண்டித் தொடச்சிட்டு வெள்ள யூனிபார்ம மாட்டிக்கிட்டு
கடைத்தெரு காரஜுல செவனேண்ணு நிண்ணு கெடக்கேன். எவனாச்சும் ஓசியில சூடா டீ வாங்கிக்
குடுப்பானாண்ணு மனசுக்குள்ள நப்பாச வேற...... இந்த குளுருக்கு பொழுதன்னைக்கும் எதாச்சும்
கொதிக்க கொதிக்க உள்ள எறக்கிகிட்டே இருக்க
வேண்டியதால்ல இருக்கு.
டீஸல் வெல
ஏறிக் கெடக்கு, இதுக்கு நடுவுல ஊர் தல தன்னோட வண்டிய எந்தலையில கட்டிட்டு கடன வாங்கி கொஞ்சம் குடு அப்பறம் மாசா மாசம் பாங்கியில லோன் கடன கட்டிட்டா நீயி கார்
ஓனர் ஆயிடுவண்ணு சொன்ன பசப்பு பேச்சில நானும் மயங்கி போயிட்டேன். இப்ப கடனுக்கு வாங்குன
காசு பாங்க் லோனுக்கு கட்ட வேண்டிய பணம் எல்லாம் தல மேல ஏறி நிக்கிது......... இதெல்லாம்
பத்தாதுண்ணு கிறிஸ்மஸ் வேற தொணைக்கி.......... சவாரியத்தான் காணாம்"
தனக்குத்தானே
பொலம்பிகிட்டு கெடக்கிறது இப்ப டிரைவரோட பழக்கமாயிருச்சு......
"டிரைவர்
சவாரி வர்ரிங்களா? மருமகளுக்கு ஒடம்பு சரியாயில்ல. அவுங்க அம்மா வீட்ல விட்டுட்டு திரும்ப
வருணும் வண்டி 'ஏசி' யா ? கார் நல்ல கண்டிஷன்ல இருக்கா?
கூப்பிட்டவர
ஒரு வணக்கம் சொல்லி பாக்குறேன்
அவரோட வயசுக்கு
சம்மந்தம் இல்லாம.....தல நெறையா மல்லிகைப்பு மாதிரி முடி.... மொகத்துல ஒரு தேஜஸ்
ரேட்டெல்லாம்
படிஞ்சி வண்டிய கெளப்பிட்டேன்
நல்ல கஸ்டமர்தான்.......
அவுங்க சாப்புடறப்பெல்லாம் நானும் கூடவே...
அப்பப்ப டீ.......... தூக்க மயக்கத்துக்கு தேவார்மித மருந்து மாதிரி! அவுங்க ஓய்பும்
நல்ல மாதிரி..... ஏகத்துக்கும் சுறுசுறுப்பு!
நம்ம நடக்கையில் அவுங்க ஓட்டமா போறாங்க.. நம்ம ஓடுனாக்க பறப்பாங்களோ?!
இப்பல்லாம்
வெளிய போறத்துக்கு அப்பப்ப என்னிய கூப்புடுறாங்க..
ஒரு நா அப்புடித்தான்
அவுங்க வீட்டு வாசல்ல வண்டிய நிறுத்துறேன்.
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் அவுங்க தோட்டக்காரன ஆசீர்வாதம் பண்ணி கிஃப்ட் குடுக்குறாங்க..... அவுங்க உள்ள போனப்புறம்
"என்னாப்பா விசேஷம்.... கொழந்த ஏதும் பொறந்திருக்கா? ங்கிறேன்.
"இண்ணைக்கி எனக்கு பொறந்த நாளு அண்ணே.' சொன்னவனுக்கு
மூஞ்சி பூரா கொள்ள முடியாத சிரிப்பு!
எனக்கு ஆச்சிரியமா
போச்சு ..... வேலக்காரனுக்கு பொறந்த நா கொண்டாட்டமா..... நான் தெகச்சுப்போய் நிக்கிறத
பாத்துட்டு அந்தப் பய "என்னாண்ணே நம்ப
முடியிலியா அவுங்க வாங்கியிருக்க நெலத்துல
வேல செய்யிரவங்க அவுங்க பொண்டாட்டி பிள்ள குட்டிக எல்லாரு நல்ல நாளையும் அட்டவண போட்டு அவுங்க ரூம்புலல்ல மாட்டி வச்சிருக்காங்க......"
இப்டி கூட
மனுஷங்களா ..?
"நல்லாரைக்காண்பதுவும் நன்றே நல மிக்க நல்லார்
சொல் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும்
நன்றேண்ணு" பொட்ட நெட்ருவா வாய்ப்பாடு
மாதிரி சின்ன வயசுல ஒப்பிச்சது மனச இண்ணைக்கி நெறச்சிடுச்சு.,,,,, கண்ணுலயும் தண்ணிய
ரொப்பிடுச்சு!
அண்ணையிலர்ந்து ஐயா அம்மா சூப்பர் மார்கெட்டுக்குப்
போனா பைகள தூக்க வுடமாட்டேன். நமக்கு தெரிஞ்ச வெடத்திலேர்ந்து ஒரிஜினல் தேனு, தோட்டக்
காரங்கள்டேருந்து
மொளகு, செடிகளுக்கு தரமா நாத்து.... இதெயல்லாம் அவுங்களுக்கு செய்யிறது எனக்கு பெரிய
பாக்கியம் மாதிரி இருக்கு!
அண்ணைக்கி
ஒரு நா கீழ இருக்க டவுனுக்கு பொயிட்டு திரும்ப வர்றோம்... மல ரோட்டுல வண்டி மக்கார்
பண்ண ஆரம்பிச்சிடுச்சு.. ஐயாவும் கீழ எறங்கி வந்து பாக்குறாரு. ஒண்ணுக்கும் மசிய மாட்டங்குது.
எப்புடியோ ஒரு வழியா வண்டிய மெக்கானிக் ஷாப்புக்கு
தள்ளி கொண்டாந்தாச்சு.
ஒரு வாரமாச்சு........ வீட்ல சுருண்டு
போயி கெடக்கேன்...... வண்டி ரிப்பேரு காசு
கொண்டே முட்டியான் கணக்குல நிக்குது...... காரு வாங்க கடன் குடுத்தவன் அண்ணைக்கி வாசப் படியில நிண்ணுகிட்டு
அசிங்கமா திட்டிபுட்டான் ....... மானம் இருந்தா வீட்ட வித்து பணத்த கீழ வையிங்கிறான்.
பேங்குகாரனுக உடாப்புடியா நிக்கிறானுக.
வீட்லயும்
"இப்டி புத்தி கேட்டுபோயி நிக்கிறியே? காரு வாங்கறதுக்கு மின்ன ஓகோண்ணு இல்லாட்டினாலும்
வாடகைக்கு ஓட்டிகிட்டு நிம்மதியாத்தான கெடந்தோம்... இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணாண்ணு...
மானம் போயி நிக்கிறோம்....... இந்த வீட்ட வித்து கடன ஒடன அடச்சுப்புட்டு ஊரோட போய் சேந்துடுவோம்... கஞ்சியோ கூழோ மானத்தோட
கெடப்போம்"ண்ணு புடியா நிக்கிது.. பிள்ளகுட்டிக படிப்பெல்லாம் வீணாப் போயில்ல
தொலஞ்சிடும்... ஊருகாரனுக " போன மச்சான் திலும்பி வந்தான் பூமணத்தோட" ண்ணு
வேற சாட பேசுவானுங்க... பித்து புடிச்ச மாதிரி ஒண்ணும் புரியாம அலமலந்து போயி கெடக்கேன்.
வீட்ல சொன்ன மாதிரி இந்த வீட்ட விக்கிறதுக்குதான்
ஒரே வழி..... மூடிகிட்டு
மூலையில கெடந்தா வேலைக்கி ஆவாது....... நாளைக்கி மொத வேல அதான்
"என்னப்பா
செல் போன ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க ஒடம்பு சரியாயில்லியா?"
வாரி சுருட்டி
எந்திரிக்கிறேன்... அம்மாவும் ஐயாவும் வாசப்படியில ......
அப்புடியே
அவுங்க காலுல வுழுந்துடுறேன் ....
அம்மா..... ஐயா.....
வாயிலேர்ந்து வேற வார்த்த வரமாட்டங்குது....... இந்த ஏழயோட வீட்டுக்கு........இவ்வளவு ஒசந்தவங்களா...... நம்ப முடியில
"இன்னம்
வண்டிய எடுக்குலியா ?" அம்மா கேக்குது
"சீக்கிரம் எடுத்துருவம்மா......."
"அம்மா
கிட்ட கூட இந்த ஆளு பொய் பேசுராரும்மா"ண்ணு சொன்ன டிரைவர் மனைவி மடை தொறந்த மாதிரி சகலத்தையும் கொட்டி முடிச்சுடுச்சு.
"சரிம்மா
இந்த கார இவுருகிட்ட வித்ததுக்கு ஏதும் ஸ்டாம்ப் பேப்பர்ல எழுத்து வழியா பத்திரம் வச்சிருக்கிங்களா?"
"எல்லாமே
வாய் வார்த்தைங்கதான் சாமி ........ நம்பிக்கையிலதான் வண்டிய எடுத்துகிட்டு வந்தாரு....
இண்ணைக்கி பெரும் சிக்கல்ல மாட்டிகிட்டு கெடக்கோம். இந்த ஊட்ட வித்து கடன அடைச்சிட்டுட்டு
ஊரோட போயிடலாம்ணு முடிவு பண்ணியிருக்கோம் சாமி........."
"சரி
எது பண்ணுனாலும் ஒரு தடவைக்கி ரெண்டு தடவ யோசனை
பண்ணி முடிவெடுங்க..... எங்குளுக்குத்தான் இந்த பையன் இல்லாம கை ஒடஞ்ச மாதிரி இருக்கும்.
இந்தா இத கைச்செலவுக்கு வச்சிக்க."
"என்னா
பாக்கியம் நம்முளுக்கு....... இவ்வளோ நல்ல மனுசங்க இந்த குச்சு வீட்டு வாசப்படிய மிதிச்சிருக்காங்க
பாரு......சரி.... நான் ப்ரோக்கர இப்பயே பாத்துட்டு
வந்திர்றேன்" ஸ்வெட்டர மாட்டிகிட்டு கெளம்பிட்டேன்
ஒரு நா காலையில
குளுருக்கு இதமா இழுத்து போத்தி கிட்டுதூங்கிகிட்டு கெடக்கேன் " எப்பா... எப்பா.... இங்க ஓடியா.... சீக்கிரம் ஓடியாயேன் ....... பள்ளிக்கூடத்துக்கு கெளம்பிகிட்டு இருந்த
என் பையன் போட்ட சத்தத்துல தூக்க கலக்கமா உழுந்தடிச்சி
வெளிய ஓடியாறேன்.... என் கண்ண என்னாலேயே நம்ப முடியில...... என் கார மெக்கானிக் அண்ண
ஓட்டிகிட்டு வந்து என் வாசப்படியில நிறுத்தியிருக்காரு......
தலைய சொரியிறேன்
"அண்ணே இன்னம் கையில பணம் பொரளுல....."
தயங்கி தயங்கி சொல்றேன்......"
" பணம்
என்னாப்பா பணம் .....? மனுஷங்கதாம்ப்பா முக்கியம்...மொள்ள குடு." சொல்லிகிட்டே
நமுட்டு சிரிப்போட நடைய கட்டுனாரு
மெக்கானிக்
அண்ணனா பேசுறாரு ..?! எச்சி கையால ஈ ஓட்டாத ஜாதி!
ரொம்ப நாளைக்கப்பறம்
வண்டிய கடைத்தெரு கராஜில நிறுத்திபுட்டு புரோக்கரோட
பேசிக்கிட்டு நிண்ண நான்
கொரல் கேட்டு
திரும்புறேன்........ தல......
"பெரிய
பெரிய ஆள எல்லாம் கையில போட்டு வச்சிருக்கமாரில்ல இருக்கு"
ஐயா......
என்னாங்க சொல்றிங்க....... கைய கும்புட்டுகிட்டே
அவுர பாக்குறேன்.
இந்தா....
பத்திரம்......... காருக்கு சொந்தக்காரன்.....ஆயிட்ட
போ......
வீட்டுக்கு
வந்து தல நல்ல மாரியா பத்திரம் குடுத்த வெஷயத்த சொல்லிபுட்டு நமக்கு வேண்டிய பெரிய மனுஷன்
ஆரா இருக்கும்ண்ணு நான் கேட்டதுதான் தாமசம்
அது என் மக்குத்தனத்த நெனச்சு தலையில அடிச்சிகிச்சு
"அட மூட மனுஷா......... இப்புடி கூடஒண்ணும்
புரியாத ஜடமா இருப்பியா என்னா. ? எல்லாம் அம்மா ஐயா பண்ற வேலைய்யா........!
இங்க பாரு இண்ணைக்கே நாம ..... பிள்ளைகளகூட்டிகிட்டு
அவுங்கள பாக்க கெளம்புறோம் ...... போற வழியில மெக்கானிக் அண்ணன்கிட்டயும் ஒரு வார்த்த
பேசணும்... அவுரு நமுட்டு சிரிப்பு எனக்கு சரியா படுல........ஐயா அம்மாதான் அவுருக்கும்
பணம் செட்டில் பண்ணியிருக்கணும்!"
ஐயா........
அம்மா ...... கொரல் குடுக்குறோம்... வெளிய வந்தவங்க காலுல சாஷ்டாங்கமா உழுவுறோம்
.......
"தெய்வம்யா........ நீங்க ரெண்டு பெரும் நாங்க கண்கண்ட தெய்வம்......" அந்த கால்கள கெட்டியா புடுச்சுகிட்டே நான் கத்துறேன்.....
"அப்படில்லாம்
சொல்லாதப்பா...... நம்ம எல்லாரும் கடவுளோட கொழந்தைக..... ஒருத்தொருக்கொருத்தர் இத கட்டாயம்
பண்ணணும்......அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்ப்பா...... பேங்ல நீ எதுக்கு அனாவசியமா
வட்டியும் மொதலும் கட்டணுமுண்ணு லோன முடிச்சிட்டேன்..... நீ மாசாமாசம் மொதல முட்டும்
எனக்குக்கட்டிடு... அப்பறம் வெளிய வாங்குன கடன் எவ்வளவுண்ணு கணக்கு பண்ணி எங்கிட்ட
சொல்லு.. அதையும் தவணையில திருப்பி குடுத்துடு என்னா சரியா.......?
"ஏசு
பாலன் சாமியும் மாதாவுமே எம் மின்னாடி வந்து
நிக்கிறாரோங்களோ!"
என் காலு
ரெண்டும் நடுக்குது..... தளந்து போயி நிக்க முடியாம நிக்கிறேன்... வாயில வார்த்த இல்ல....
கண்ணு முட்டும் தார தாரையா ஊத்துது
எங்க கிறிஸ்மஸ்
அவங்களுதா ஆயிப்போச்சு ... "
ஏங்க....கம்ப்யுட்டர்ல
நம்ம நல்ல நாள் லிஸ்ட்ட மாத்தித் தர்ரங்க....
நம்ம ரூம்ல இருக்க பழைய லிஸ்ட்ட எடுத்துருங்க..."
பொறந்த நா
பரிசு வாங்குன தோட்டக்கார பையன் மனசுக்குள்ள வர்றான்.
பிள்ளைகள்ட்ட
தேதி வெவரம் கேக்குற அம்மாவோட
கொரல் எங்காதுல
தேனாப்பாயுது!!
-------------------------------------------------------------------------------------------------------------------
பி.கு இந்த அருமையான தம்பதியரை எங்கள் வாழ்வின் ஒரு செறிவு
நிறை அத்தியாயமாகக் கொண்டிருப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி!!
கண்களில் நீரை வரவழைத்த பதிவு . ரொம்ப யோசித்தாலும் யோசிக்காவிட்டாலும் எனக்கு ஐயாவும் அம்மாவும் நீங்க ரெண்டு பேருதான் .நத்தார் தின வாழ்த்துக்கள் .
ReplyDelete