இளம் தம்பதியர். கிறிஸ்துக்கு சேவை செய்யும் பணி
அவர்களது. பெரிய கோயில் இல்லையென்றாலும் நகரத்துக்கு பக்கமான ஒரு இடத்திற்குத்தான்
அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர். பெரிய எதிர்பார்ப்புடன் அங்கு சென்றவர்களுக்கு பெரும்
ஏமாற்றந்தான் காத்திருந்தது. பழுதடைந்து சிதிலமடைந்த கோயில்...... ம்ம்ம்....இங்குதான் நம் சேவையா....
மனதிலே வருததம் இருந்தாலும் அவர்களுக்குள்ளே தளர்வு இல்லை. சரி சரி இது அக்டோபர் மாதந்தான்
நமது முதல் செபக்கூட்டத்தை கிறிஸ்மஸ் இரவு தொடங்கும்படியாக ஒரு திட்டம் போட்டுக்கொள்வோம்
என இருவரும் முடிவு செய்தனர்.
சுவர்களையெல்லாம்
பட்டி பார்த்து, சுண்ணாம்பு அடித்து உடந்து கிடந்த இருக்கைகள் முழங்கால் படியிடு முன்
சாய்வுகள் நேரம் காலம் பார்க்காத அவர்கள் உழைப்பு
கெடு வைத்த டிசம்பர் 21ம் தேதிக்கு முன்னதாகவே
கோயில் பளிச்சென்று ஆக்கியிருந்தது. 18ம் தேதி கோயிலை மூடிவிட்டுச்சென்ற அவர்கள் மனதில்
மகிழ்ச்சி!! எல்லாம் கடவுள் கிருபைதான்!!
19ம் தேதி
அந்த ஊரில் ஆரம்பித்த பயங்கர சூராவளிக்காற்றுக்கும்
மழைக்கும் இரண்டு நாட்களுக்கு ஓயவேயில்லை
21ம் தேதி
கோயிலைத்திறந்த பாதிரியாருக்குப் பெரும் அதிர்ச்சி
காத்துக்கிடந்தது. பீடத்திற்குப்பின்னால் இருந்த சுவர் உடைந்து கிடந்தது. ஓட்டை கிட்டத்தட்ட
இருபதுக்கு எட்டு அடி இருக்கும். பிளாஸ்டர் எல்லாம் பிய்த்துக்கொண்டு குப்பை மலையாய்
கீழே; தரையில் கிடந்தவற்றையெல்லாம்கூட்டி சுத்தம் பண்ணிய அவருக்கு மேலே என்ன செய்யமுடியும்
என்பதே புரியவில்லை. தெளிவானது ஒன்றே ஒன்றுதான். முதல் செபக்கூட்டம் கிறிஸ்மஸ் அன்று
இரவு தொடங்க முடியாது என்பது மட்டுந்தான்.
சிறு வருத்தத்தோடு
அவர் வெளியே கிளம்பினார். போகும் வழியில் ஒரு சந்தை; ஜனங்கள் கூட்டங்கூட்டமாக நின்று
கொண்டிருந்தனர் வாங்கும் எண்ணம் ஏதும் இல்லாமல் அவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கே
இறங்கினார். ஏதோ ஒரு தருமத்திற்காக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சுற்றி வரும் போது
லேஸ் மேசை விரிப்பு ஒன்று அவர் கண்ணில் படுகிறது.ரொம்ப அழகாக இருக்கிறதே என உற்று நோக்குகிறார் சன்னமான நுண்ணிய பின்னல், தந்த நிறம்; விரிப்பின் நட்ட நடுவே ஒரு சிலுவை அவர் மனசுக்குள்
ஒரு பொறி…… பீடத்திற்குப் பின்னால் இந்த மேசை விரிப்பைத்தொங்கவிட்டால் என்ன......? கோயிலின் ஓட்டயை அது கட்டாயம் மறைத்து விடும்
…..சட்டென்று வாங்கிவிட்டார் …….
மேசை விரிப்போடு பாதிரியார் கோயிலுக்குள் வருகையில்
பனி பெய்ய ஆரம்பித்துவிட்டது. அப்போது எதிர்த்திசையிலிருந்து ஒரு வயதான பெண் ஒருவர்
பஸ்ஸைப்பிடிக்க ஓடிவருகிறார். ஆனால் பஸ்ஸைத் தவற விட்டுவடுகிறார் அடுத்த பஸ் வருவதற்கு
இன்னும் 45 நிமிடங்கள் ஆகும். ஆகவே பாதிரியார் அவரை கோயிலுக்குள் வந்து அமருமாறு அழைக்கிறார்ர்.
பாதிரியாருக்கு நன்றி கூறியஅவர் அங்கிருந்த இருக்கை ஒன்றில்அமர்ந்து கொண்டார். மற்றபடி
பாதிரியார் ஏணி எடுத்து வருவதையோ பீடத்திற்குப்பினால் வேலை செய்வதையோ கண்டு கொள்ளவேயில்லை.
தன் நினைவிலேயே அவர் ஒன்றிப்போயிருந்திருக்கவேண்டும்! ஏணியைப் போட்டு எல்லாவற்றையும்
சரி பண்ணி எட்டிப்போய் நின்ற பாதிரியாருக்கு ஒரே ஆச்சரியம் அந்த லேஸ் மேசை விரிப்பு..
என்னமோ பீடத்திற்கே அளவு எடுத்தது போல் சிக்கெனெ இருந்தது …….விரிப்பின் அழகில் அவர் சொக்கித்தான் போனார்..
ஆகா இந்த கிறிஸ்மஸ்விழா கோயிலுக்குள்ளேயே நடக்கப்போகிறது என்ற எண்ணமே அவருக்கு உற்சாகம்
ஊட்டியது. இந்த அருமையான நினைப்புகளுடன் திரும்பிப்பார்த்த அவர் அந்த வயதான மூதாட்டி
பீடத்தை நோக்கி வருவதைப்பார்க்கிறார். மூதாட்டியின் முகம் பேயறைந்தது போல் இருந்தது.
"அய்யா இந்த மேசை விரிப்பு எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது ?" என அவர் கேட்க பாதிரியார் எல்லா விவரங்களையும் அவ்ருக்குச்
சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அப்பெண்மணி அந்த மேசை விரிப்பின் வலது பக்க கீழ் மூலையில்
EBG மூன்று எழுத்துக்கள் பின்னப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கச் சொன்னார். ஆம் அந்த
மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன என பாதிரியார் சொல்லவும் அம்மூதாட்டி அந்த மேசை விரிப்பை
தான் பின்னியதாகக் கூறினார். 35 வருடங்களுக்குமுன்னால்
அவரும் அவர் கணவரும் ஆஸ்திரியாவில் இருந்தனர் மிகவும் வசதியாக குடும்பம். நாசிப்படைகள்
ஆஸ்திரியாவுக்குள் நுழைந்த போது அவர் கணவர் அவரைக்கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பிவைத்து
விட்டார். அடுத்த வாரமே அவரைப்பின்தொடர்ந்து வந்துவிடுவாதாக உறுதி கூறி.யிருந்தார்
ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது. சில நாட்களிலேயே நாசிப்படைகள் அவரைக்கைது செய்து சிறைப்படுத்தினர்.
35 வருடங்களுக்கு முன்னால் பார்த்த தன் கணவர இன்று உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற
நிலையில் என்ற ரெண்டுங் கெட்டான் நிலையில் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருப்பதாகவும் சொன்ன
அவர் இப்பொதைக்கு அவர் இங்கிருந்து கொஞ்சம் தூரத்தில் வசிப்பதாகவும் எப்போதாவது இந்தப்பக்கம் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்துவிட்டு
பஸ்ஸில் போய்விடுவது வழக்கம் என்றும்கூறினார்
நிலமையை உணர்ந்த பாதிரியார் அவர்களுக்குச் சொந்தமான
அந்த மேசை விரிப்பை அவருக்கே கொடுத்துவிடுவதாகச் சொன்னார். இல்லை இல்லை நீங்கள் அதைக் கோயிலுக்கே வைத்துக்கொள்ளுஙகள்
எனக்கூறிவிட்டார் அப்பெண்மணி
அப்படியானால்
என்னோடு நீங்கள் காரில் வர வேண்டும் உங்கள் வீடு ரொம்ப தூரத்தில் அல்லவா இருக்கிறது.
இந்த சின்ன உதவியையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
கிறிஸ்மஸ் அன்று இரவு அருமையான செபக்கூட்டம். கோயிலும்
கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது. நிறைவான பாடல்களும் அதோடு ஒன்றிப் போன மனித இதயங்களும்
அந்த இரவு செபக்கூட்டத்திற்கு எழில் ஊட்டின.
கோயில் முடிந்தபின் பாதிரியாரும் அவர் மனைவியும்
கோயில் முகப்பில் நின்று எல்லோருடனும் கைகுலுக்கி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து
கொண்டனர்..
"அருமையான நிகழ்வு இந்தக் கோயிலுக்கு நாங்கள் திரும்பவும்
வருவோம்.”என நிறைய பேர் அவர்களுக்கு உறுதி கூறினர்.
கூட்டம் எல்லாம் கலைந்தாகிவிட்டது. முழு திருப்தியுடன்
வீடு செல்ல அவர்கள் முடிவு செய்தபோது ஒரு மனிதர் மட்டும் அங்கு வெறிச்சிட்டு அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார்கள். பாதிரியார்
சமயத்தில் கோயிலுக்குப் பக்கத்தில் அவரைப்
பார்திருக்கிறார் அருகில்தான்தான் அவர் வீடு இருக்கவேண்டும். பாதிரியார் பக்கத்தில்
நிற்பதை உணர்ந்த அம்மனிதர்அவரைப்பார்த்து " ஒரே மாதிரியான இரு மேசை விரிப்புகள் அதுவும் கையால் பினனப்படது சாத்தியமா என்று எனக்குத்தெரியவில்லை.
பல வருடங்களுக்கு முன் இரண்டாம் உலகப்போருக்கு முன் நாங்கள் ஆஸ்திரியாவில்
இருந்தபோது என் மனைவி இதே போல் அச்சாக ஒரு மேசை விரிப்பைப் பின்னியிருந்தாள். ஆனால்
நாசிப்படைகள் ஆஸ்திரியாவை முற்றுகை இட்டபோது என் மனைவியை கட்டாயப்படுத்தி பத்திரமான
இடத்திற்கு அனுப்பிவைத்தேன்..நானும் சில நாட்களில் அவள் இருந்த இடத்திற்குப் போய் சேர்ந்திருக்க
வேண்டும். ஆனால் அதற்குள் நாசிகள் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.
என்மனைவியின் கதி என்னாஆயிற்று என்று கூட எனக்குத்தெரியவில்லை. அதெல்லாம் இருக்கட்டும்
இந்த மேசை விரிப்பை நீங்கள் எங்கே வாங்கினீர்கள் என சொல்ல முடியுமா"
பாதிரியார் அவருக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
“என்னோடு
கொஞ்சம் வாருங்களேன்.பேசிக்கொண்டே காரில் ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம்.” என்று
மட்டும் சொல்ல அவரும் உடன் ஏறிக்கொண்டார். வெகு தூரம் சென்ற பாதிரியார் காரை விட்டு இறங்கி கைத்தாங்கலாக அவரை மூன்று மாடிகள்
வரை இட்டுச் சென்று கதவின் மணியை அமுக்கினார். ஆச்சரியம் கவ்விய இதயங்கள் இரண்டு……
இருவரும் ஒருவரையொருவர் பார்க்கின்றனர் திகைத்துப்போய் நிற்கின்றனர்.அந்த நொடி நேர
சந்திப்பின் உணர்வுக் குவியல்களை சங்கமத்தை எழுத்தால் எழுதிச் சொல்லமுடியுமா, இல்லை
பெரும் வர்ணிப்பில்தான் அடக்க முடியுமா?!! அந்த சந்திப்பு கிறிஸ்மஸ்ஸின் மிகப்பெரிய
புதுமையல்லவா?!! எல்லாக் கதவுகளும் எனக்கு மூடப்பட்டுவிடன என நாம் எண்ணுகையில் இதோ
பார் கோட்டை வாசலையே உனக்குத் திறக்கிறேன் என சங்கெடுத்து முழங்கும் சிறப்பாளிஅல்லவா
நம் இறைவன்!!!
ஆகவே “எனக்கு ஏன் இது நடக்கிறது?” எனும் கேள்வியை
நம் வாழ்க்கையில் என்றும் தவிர்ப்போம்.
“என் இறைவன் என்னோடு இருக்கையில் என்ன பயமெனக்கு”
என எந்நேரமும் எந்நொடியும் அறுதியிட்டு உறுதியாகச்சொல்வோம்
No comments :
Post a Comment