ஒவ்வொரு வருடமும் குழந்தைகளை முன் வைத்து பெரிய
அக்கா ஜெசி கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை தயாரிப்பார்கள். இந்த வருடம் அவர்கள் வேலைப்பளுவால்
இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. என்னிடம் கொடுத்து கம்ப்யூட்டரில் எல்லோருக்கும்
அனுப்ப முடியுமாம்மா என்று கேட்டார்கள்.
வாழ்த்து உங்கள் அனைவருக்கும்!
மகிழ்ந்து செயல் படுவோம், நம் பிள்ளைகளை செயல்படச்செய்வோம்
-------------------------------------
ஆயிரக்கணக்கில் செலவு செய்து
ஆயத்த ஆடைகள் கொண்டு மகிழாதே
அவ்வாயிரத்தில் நான்கு உடைகள் வாங்கி
ஆடைகள் இன்றி தவிப்போருக்கு மூன்றைக் கொடு
ஆரவாரமின்றி ஒன்றை உடுத்தி
ஆண்டவர்
ஏசுவின் பிறப்பு விழாவை
மகிழ்ந்து
கொண்டாடு!
தன் காரியப்புலியாய் இராதே பிறர் காரியப் புலியாய்
ஆகிவிடு!!
ஆசைஆசையாய் அனைத்து உணவுகளையும்
ஆனந்தமாய்
தின்று மகிழாதே
ஆதவன் உதித்தது முதல் மறையும் வரை
ஆகாரமின்றித் தவிப்போருடன்
அனைத்தையும் பகிர்ந்து உண்டு
ஆண்டவரின் பிறப்பு விழாவைமகிழ்ந்து கொண்டாடு!
தன் காரியப்புலியாய் இராதே பிறர் காரியப் புலியாய்
ஆகிவிடு!!
உலகமெங்கும் உள்ள என் பேரக்குழந்தைகள் அனைவரும்
பிறர் காரியப்புலியாய் மாறுவீர்கள் என நம்புகிறேன்!
அதற்காக அனுதினமும் வேண்டுகிறேன்.
we have to accept and share with needy and oor
ReplyDelete