எங்கள் பிள்ளைகள் அம்மா தினத்தையும் அப்பா தினத்தையும் கண்டுகொள்வதேயில்லை.
உண்மையான பாசத்தை தள்ளுபடி
கொடுத்துகொச்சைப்படுத்தும் வர்த்தக தினம் என்பது அவர்கள் அசைக்கமுடியாத கருத்து
அவர்கள்
கருத்தில் எங்களுக்கும் உடன்பாடே.
ஆனால் அரசியல்
ரீதியாக வந்த யோக தினத்தைப்பற்றி என்னால் அவ்வாறு
நினைக்கமுடியவில்லை. பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இதைக்குறித்து
தந்த தகவல்கள்
மகத்தானவை!
என் பங்கிற்கு
நானும் கொஞ்சம்.........
அழகான இந்த
எழுத்துக்கள் என் வசமான போது மகிழ்ந்தேன், சுவைத்தேன். யான் பெற்ற பேற்றை
இவ்வையகமும் பெருக என்ற ஒற்றை நோக்கோடு உங்கள் முன் அதையே சமர்ப்பிக்கிறேன். மெள்ள
மெள்ள உள் நோக்கி சென்று சுகம் காணுங்கள்!
- தான்என்ற அகங்காரத்தால் நீங்கள் போட்ட முடிச்சை மெல்ல அவிழுங்கள்
- உங்கள் கோபத்தால் ஏற்பட்ட முடிச்சை அவிழுங்கள்
- உங்கள் பொறாமையால் ஏற்பட்ட முடிச்சையும் அவிழ்த்துவிடுங்கள்.
- உஙகள் ஏமாற்றங்களால் ஏற்பட்ட படு முடிச்சுகளை மெல்ல அவிழ்த்துவிடுங்கள்
- முடிச்சுகள் அவிழ்பட்ட உங்கள் உடம்பு இப்போது லேசாக இருப்பதை மெல்ல மெல்ல உணருங்கள்.
- இப்போது தளர்வாக அமருங்கள்
- நேராக நிமிர்ந்து அமருங்கள்
- தனிமையாக அமருங்கள்
- இனிமையாக அமருங்கள்
- தன்னுள் அன்பாக அமருங்கள்
- சுகமாக அமருங்கள்
- சுகந்தமாக அமருங்கள்
- சுகந்தத்திற்குள் அமருங்கள்
- இலகுவாக அமருங்கள்
- இலேசாக கண் மூடி அமருங்கள்
- கண்ணின் மேல் இமை கீழ் இமையோடு உறவாடி நிற்பதை கண்டு அனுபவியுங்கள்
- அதிகாலைக் குளத்தின் குளிர்ச்சியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட வெண் தாமரை மலரில் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து அமர்ந்திருங்கள்
- இந்த உணர்வினை காலை மாலை 10 நிமிடங்கள் அரும் பெரும் தியானத்தை அனுபவியுங்கள்.
Simple elegant way of meditation and comes fro someone who practices what she writes or speaks.
ReplyDeletePlease spread this message.
Wonderful Madam, Pls share this in Facebook also so that more people can be benefitted. Thank you so much
ReplyDeleteWonderful thoughts well expressed. Mind blowing!
ReplyDelete