நவம்பர் 2ந்தேதி
உத்திரிக்கிற ஆத்துமாக்கள்
திருநாளின் போது
நீங்கள் சென்னையின்
குவிபிள் தீவு
கல்லறைக்கு வர
நேர்ந்தால், அங்கு
ஒரு கல்லறை
எல்லாவற்றையும் போல
பூக்களால் அலங்கரிக்கப்படாமல்
கும்குவாட் பழங்களால்
நிறைக்கப்பட்டிருப்பதை பார்த்தீர்களென்றால்
அதற்குப்பின்னால் அருமையான
ஒரு கதை
ஒன்று உறங்கிக்
கொண்டிருக்கிறது என
இன்று தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்.
கதை இப்படித்தான்
ஆரம்பிக்கிறது. சுலபமான
கல்கத்தா வாழ்க்கை......
தலையீடு ஒன்றும்
இல்லாமல் மூளைக்கு
சவால் விடும்
பிரியமான வேலை...
போதுமான சம்பளம்......
இருந்தாலும் சொந்தமாக
ஏதாவது ஆரம்பிக்க
உள்ளே ஒரு
இடைவிடா குத்தல்...............
கையில் பி
எஃப் பணம்.......
மனசு கொள்ளா
நம்பிக்கை.. இந்த
முதலீட்டுடன் தான்
எங்கள் சென்னை
வாசம் தொடங்கியது......
ஒன்றுமே முடியாத
கட்டத்தில் இரண்டு
பேரின் படிப்பு
என்ற நம்பிக்கை
கவசம் காவல்
சம்மனசுபோல் கூடவே
நின்றது.
பிரச்னைகளுக்குக்
குறைவில்லை.
வங்கியில், உற்பத்தி
செய்த பொருட்களை(இந்தியா
எங்கும்) விற்பதில்
விற்ற பொருளின்
பணத்தை வாங்குவதில்.......
இப்படி ஏகம்
ஏகமாக.......
இந்த மாதியான
ஒரு
நிலையில்தான் பொன்னைய்யா
அங்கிளின் எதிர்பாராத
நட்பு கிடைத்தது
(அந்த நட்பு
மலர்ந்த அபூர்வ
சம்பவம் குறித்து
ஏற்கனவே ஒரு
ப்ளாகில் எழுதியுள்ளேன்.)
அங்கிள் வீட்டிற்கு
வரும் நேரங்களில்
இவர் தனது
அன்றாட பிரச்னைகளின்
பகிர்ந்து
கொள்ளுவார். அங்கிளும்
அவர்களுக்குத் தெரிந்த
அரசாங்க மற்றும்
பத்திரிக்கை உலகின்
பெரும் புள்ளிகளுக்கு
இவரை அறிமுகப்படுத்தி
இவர் ஆரம்பித்திருக்கும்
கம்பெனியை முன்னுக்குக்
கொண்டுவர தங்களால்
முடிந்த உதவி
செய்ய கேட்டுக்கொள்வார்கள்.
" ராஜா
புலி வால
புடுச்சிட்டிங்க...... ஏறி
உட்காந்துதான் ஆவணும்
அது உங்களால
முடியும்”
என திண்ணமான அவர்
குரல் எங்கள்
மனதில் பதிந்து
போனது
ஒரு நாள் நாங்கள்
எல்லோரும்
பேசிக்கொண்டிருக்கையில்
அவர் “ ராஜா
என்னப்பத்தி நீங்க
என்ன நினைக்கிறிங்க?”
என்ற ஒரு
கேள்வியை எழுப்பினார்.
"என்னா அங்கிள்
இப்டி கேட்டுட்டிங்க
ஒங்க பேருக்குப்பின்னாலதான்
மொழம் நீளத்துக்கு
டிகிரி இருக்கே..
எவ்வளோ பெரிய
பதவியில இருந்திருக்கிங்க...
ரிட்டயர் ஆகியும்
எமிரெட்டஸ் சயிண்ட்டீஸ்
எங்குற கவுரம்.....
என்ன கொற
ஒங்களுக்கு..........”
"ராஜா இண்ணைக்கி
நான் ஒங்குளுக்கு
ஒரு கத
சொல்லப்போறேன் கேளுங்க.
அந்த வீட்ல
அண்ணன் தம்பிகள்தான்.......
படிப்பில எல்லாரும்
சூரப்புலிகள்... ஒன்றைத்தவிர.....
அம்மாவுக்கு இருந்த
ஒரே கவலை
இந்த ஒத்த
பையன் மேலதான்.....
மக்கு மாதிரி
இப்டி தத்தியா
. உக்காந்திருக்கானே....... கடவுளே
எல்லாப்பிள்ளைகளையும் அருமையாக்
குடுத்திருக்க.
இந்த ஒரு
பையன ஒம்புள்ளையாவே
வச்சுக்கும். இந்த
மக்கு பயல
எப்புடியாவது எஸ்எஸ்எல்சி
பாஸ்பண்ண வச்சு
ஒரு கெவுர்மெண்டு
வேல வாங்கிக்குடுத்துடும்.......
இதுதான் நீ
எனக்கு பண்ணுற
பெரிய உபகாரம்ணு
24 நாலு மணி
நேர வேண்டுதல்
அந்த அம்மா
மனசுல......
அந்த
மக்குப்பயலும் தட்டி
கொட்டி எஸ்எஸ்ல்சி
பாஸ் பண்ணித்தொலச்சிட்டான்....
அண்ணல்லாம் காலேஜுல
படிக்கிறாங்க நானும்
போரேண்ணு ஒரே
புடியா நிண்ணான்....
சரி அவன்
ஆசையத்தான் கெடுப்பானேன்ணு
காலேஜுக்கு அனுப்பி
வச்சாங்க......
காலேஜுக்குள்ள நொழஞ்ச
அந்த மர
மண்டய எந்த சாமி
வந்து தொட்டுச்சுண்ணு
தெரியில.. அந்தப்பயல
ஆராலயும் புடிக்க
முடியில..... பிஸ்சி
படிச்சான் எம்எஸ்சி
படிச்சான்.... அதிசயத்துக்கு
மேல அதிசயமா
அவனுக்கு அமெரிக்காவுல
மேல் படிப்பு
படிக்க ஸ்காலர்ஷிப்
வேற கெடச்சுது......
அந்த மக்குப்பய
யாருண்ணு நீங்க
இப்ப தெரிஞ்சிகிட்டு
இருப்பிங்க......... அவந்தான்.....
அந்த மக்கு
அங்கிள்தான்... பெரிய
தோட்டக்கல நிபுணரா
இண்ணைக்கி ஒங்க
முன்னால”
ண்ணு சொல்லிட்டு
கைகொட்டி சிரித்தார்
"போங்க அங்கிள்
எங்கள உற்சாகப்படுத்த
ஒங்களயே மட்டம்
தட்டிக்காதிங்க”
என்றேன் நான்
" அம்மா
இது உண்மையிலும்
உண்மம்மா. எங்கம்மா
வேண்டிக்கிட்ட மாதிரி
நானும் ஒங்குளுக்கு
வேண்டிக்கிறேன்...... இப்ப
இருக்க பல
தினுசான அடப்பெல்லாம்
விடுபட்டு
நீங்க ஓகோண்ணு
இருக்கத்தான் போறிங்க
பாருங்க”
என்றார் அவர்.
அவர் வாய்
முகூர்த்தம்...... ஃபேக்டரி
கட்டினோம்...... அங்கிளே
முன்னின்று அழகான
தோட்டம் ஒன்று
அமைத்துக்கொடுத்தார். அந்த
தோட்டத்தின் நடுவே
இரண்டு கும்குவாட்
செடிகள்.
"அங்கிள் என்ன
செடி இது..?”
"அம்மா இது
பேரு கும்குவாட்...
இது தென்
கிழக்கு ஆசியாவின்
அதிர்ஷ்ட மரம்....ஒரு
தடவ தோட்டக்கலை
மகாநாட்டுல சில
நிபுணர்கள் இந்த
கும்குவாட் தென்னிந்தியாவில்
வளரவே வராது
என்று சொன்னார்கள்
அதையே நான்
ஒரு சாலஞ்சாக
எடுத்துக்கிட்டு பக்குவமாக
வளர்த்து நிறைய
கன்றுகளை உற்பத்தி
பண்ணினேன் தெரிந்தவர்கள்
நண்பர்கள் போவோர்
வருவோர்க்கெல்லாம் எல்லாருக்கும்
அள்ளிக்குடுத்தேன். தென்
இந்தியாமுழுவதும் அது
வேர் புடிக்கிணுமில்ல.........இண்ணைக்கி
ஒனக்கும் இரண்டும்மா....
இது ஆயிரம்
ஆயிரமா காச்சு
இந்த எடத்தையேயே
அழகு பண்ணப்போவுது
பாரு...”.
அங்கிளின் வாக்குப்படியே..
எல்லாம் நடந்தது. பூக்கும்
காலத்தில் எம்மிடத்தை
அவைகள் மணத்தால்
நிரப்பின! அங்கிளைப்
போலவே வருபவர்
போவோர் மற்றும்
ஆசைப்பபட்டவர்க்கெல்லாம் கன்றாய்
பழமாய் பழச்சாறாய்
ஊறுகாயாய்
அந்த மரங்கள்
அக்ஷய பாத்திரமாய்
அணையா அடுப்பாய்
கொடுத்துக் கொண்டேதான்
நிற்கின்றன!
அங்கிள் பி.டபிள்யு.எக்ஸ்.பொன்னைய்யா
நம்மோடு இன்று
இல்லை ஆனால்
கும்குவாட் என்றாலே
அவர் தவிர
வேரு எவருமில்லையென
யாதுமாகி மகிழ்ந்து
உயர்ந்தே நிற்கிறார்!
அவர்கள் கல்லறைக்குச்
செல்கையில் பொங்கி
வரும் பழைய
நினைவுகளோடு அவருடைய
பழங்களாலேயே அவர்
நினைவுச் சின்னத்தை
அலங்கரித்து எங்கள்
வாழ்வின் ஊக்குவியான
அவருக்கு அன்பையும்
நன்றியையும் உரித்தாக்கிவிடுகிறோம்!
Wonderful Narration and a fabulous tribute to a great soul. May he rest in peace.
ReplyDeleteI had the opportunity of meeting him once when you were still living in the
first floor in Mandaveli.
Love you Annan and Athachi